1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One vote murugan is dmk or independent candidate?

ஒத்த ஓட்டு வாங்கியவர் திமுகவா? சுயேட்சையா?

இரணியல்
நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் இரணியல் 4வது வார்டில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றவர் திமுக வேட்பாளர் என பாஜகவினர் கூறிவரும் நிலையில் அந்த வேட்பாளர் சுயேட்சை என திமுகவினர் கூறிவருகின்றனர். 
 
4வது வார்டில் போட்டியிட்டவர் சுயேச்சை வேட்பாளர் என ஒருபுறம் ஆதாரங்களை திமுகவினர் காட்டிக் கொண்டிருக்க இன்னொருபுறம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தின் படி அவர் திமுக வேட்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
 
உண்மையில் அந்த வேட்பாளர் திமுகவா அல்லது சுயேட்சையா என்பது அவரே விளக்கம் அளித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
ரஷ்யா மீது பொருளாதார தடை: ஜப்பான் அதிரடி அறிவிப்பு!