மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் அதிகாரி

Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:41 IST)
சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டதால் கைது செய்யப்பட்டார். இதனால் காவல்துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் உள்ள ஒரு மசாஜ் சென்டர் உரிமையாளர் ஒருவரிடம் அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் ரூ.50 ஆயிரம் லஞ்சம்
கேட்டதாகவும், இதனையடுத்து அவர்
கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்திருந்து வின்செண்ட் ஜெயராஜ் லஞ்சம் வாங்கியபோது அதிரடியாக கையும் களவுமாக பிடித்தததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து
அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் லஞ்சம் பெற்றதாக கைதான அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜின் பூந்தமல்லி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :