8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர், ராமதாஸ் முன்னிலையில் கட்காரி பேச்சு

Nitin Gadkari
Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (08:39 IST)
தமிழகத்தில் எட்டு வழிச்சாலைக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட், விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வாரங்களுக்குள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும், தீர்ப்பை அமல்படுத்த ஒத்துழைக்க போவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி , ராமதாஸ் முன்னிலையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, '8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றிய பின்னர் செயல்படுத்துவோம் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு நாங்கள் வழக்கத்தை விட தொகையை ஒப்பீட்டளவில் அதிகளவில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை திட்டம் மிகவும் அவசியம் என்று கூறிய நிதின்கட்காரி, 'விவசாயிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் தேவையை நிறைவேற்றிய பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், முதலமைச்சர் அவர்களும் இந்த திட்டம் குறித்து தொடர்ந்து தன்னிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
நிதின்கட்காரியின் இந்த பேச்சுக்கு சேலம், தருமபுரி பகுதி பொதுமக்கள் எதிர்ப்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது

இதில் மேலும் படிக்கவும் :