வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (15:53 IST)

8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் – பொன்னார் விளக்கம் !

நேற்று தமிழகம் வந்த நிதின் கட்கரி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் எனப் பேசியதை அடுத்து மீண்டும் சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.

நேற்று பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி , ராமதாஸ் முன்னிலையில் பேசிய அவர். 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றிய பின்னர் செயல்படுத்துவோம் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு நாங்கள் வழக்கத்தை விட தொகையை ஒப்பீட்டளவில் அதிகளவில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மீண்டும் 8 வழிச்சாலை பற்றிய சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ’ மக்கள் 8 வழிச்சாலை திட்டத்தை விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேராலேயே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் நிதின் கட்கரி கூறினார்’ என விளக்கம் அளித்துள்ளார்.