திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (08:16 IST)

கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வர்: தயாநிதி மாறன் சொல்வது சாத்தியமா?

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறன், கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று நுங்கம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாக கூறிய தயாநிதி மாறன், கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களால் தான் தற்போது தண்ணீர் வருவதாக கூறினார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் இடையே, செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார் என்று கூறினார்.   
 
ஆனால் ஸ்டாலின் இப்போதைக்கு முதல்வராவது சாத்தியமில்லை என்றே அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது திமுகவுக்கு 89 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்களும், முஸ்லீம்லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர். மொத்தத்தில் திமுக கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். 
 
ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எனவே திமுகவுக்கு இன்னும் 20 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது 22 தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடப்பதால் அதில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே திமுக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் அமமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 4 அல்லது 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் தயாநிதி மாறன் கூறியபடி ஸ்டாலின் முதல்வராவது சாத்தியம் இல்லை என்றே அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் முடிவு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்