1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CCTV cameras in chennai govt buses

சென்னை அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமிரா: அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

சென்னை
சென்னை அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமிரா: அமைச்சர் ராஜ கண்ணப்பன்!
சென்னை அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த அதிமுக ஆட்சியில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சென்னையில் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் இதனால் பேருந்துகளில் நிகழும் குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மனைவிக்கு மேட்ரிமோனியலில் மாப்பிள்ளை பார்த்த கணவர்!