புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (08:39 IST)

புதிய கட்சி + பாஜகவுடன் இணைப்பு? அமரீந்தர் சிங் திட்டங்கள்!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்துள்ளார். 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைமை கண்டுக்கொள்ளததால் இவருக்கு கட்சியின் மேலிடத்தின் மீது மனகடப்பும் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தார். புதிய கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்துள்ளார்.