1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Case filed against Seeman in 6 sections

தமிழ்நாட்டுக்கு தனி கொடி - சீமான் மீது வழக்குபதிவு

நாம் தமிழர் சீமான்
தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு. 

 
நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சேலத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு கொடி என கூறி  ஒரு கொடியை ஏற்றி வைத்தார். 
 
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா, சீமான் மீது அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆம், சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!