திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (20:06 IST)

அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது எளிதல்ல... சீமான்

சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது எளிதில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு சிறைத்தண்டனை முடிந்து வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவ்வப்போது, அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வந்தார். இதுகுறித்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பானது.

இந்நிலையில்,விரைவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்லவுள்ளதாக சசிகலா கூறியதுபோல் இன்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக கொடியையும் பயன்படுத்தினார். இதற்கு அதிமுகவின் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான் ,  அதிமுக கட்சியை சசிகலா கைப்பற்றுவது அவ்வளு எளிதான காரியம் இல்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி விடமாட்டா எனவும், சசிகலாவின் வருகையால் அதிமுவில் தாக்கம் இருக்கும் அப்படி எப்படி என்பதை பொறுத்திருந்து பார்போம் எனத் தெரிவித்துள்ளார்.