1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (08:06 IST)

நீரஜ் சோப்ரா உள்பட 12 பேர்களுக்கு கேல்ரத்னா விருது

விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீர்ஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ஆண்டின் கேல் ரத்னா விருது பெற உள்ள 12 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: நீரஜ் சோப்ரா, லவ்லினா, அவனி லெஹரா, மணிஷ் நார்வல், சுமித் அன்டில், பிரமோத், கிருஷ்ணா, ஸ்ரீஜேஷ், மிதாலி ராஜ், சுனில் செத்ரி, மன்பிரீத் சிங், ஆகிய 12 பேர்களுக்கு 'கேல் ரத்னா' விருது அளிக்கப்படவுள்ளது.
 
இந்த விருது வரும் 13ல் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில்  வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.