செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:21 IST)

ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல்- சீமான்

சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதால் தான் ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன் கான் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல் நடந்து வருகிறது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சொகுசுக் கப்பல் நிர்வாகத்தின் மீது iஎன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது?  அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கைப்பற்றபோது மத்திய அரசு ஏன்   ஆர்வம் காட்டவில்லை? ஷாருக்கானின் மகன் என்பதால் தான் ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்