தொடர்புடைய செய்திகள்
- டாக்டரால் முடங்கிக்கிடக்கும் சிவகார்த்திகேயனின் இன்னொரு படம்!
- மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஆகஸ்ட் மாதம் தியேட்டர் திறக்க வாய்ப்பில்லை.. அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!
- 16 படங்களுக்குப் பின் இணைந்த தனுஷ் & அனிருத்!
- அதிகரிக்கும் கொரோனாவால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு: இன்று முதல்வர் ஆலோசனை!
தடையை மீறி போராட்டம் - பாஜகவினர் மீது வழக்கு பதிவு!
தஞ்சையில் நேற்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து தமிழக அளவில் பாஜக போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டத்தில் பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தஞ்சையில் நேற்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று தஞ்சையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். கொரோனா விதியை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
