டாக்டரால் முடங்கிக்கிடக்கும் சிவகார்த்திகேயனின் இன்னொரு படம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலிஸ் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் அதில் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதனால் இப்போது வரை டாக்டர் ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
டாக்டர் இதுபோல சிக்கலில் இருப்பதால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து தொடங்குவதாக இருந்த சிங்கபாதை என்ற படத்தின் பணிகள் அடுத்த கட்ட முன்னேற்றம் எதுவும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளதாம். டாக்டர் ரிலீஸூக்கு பின்னரே அந்த படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.