1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:17 IST)

அதிகரிக்கும் கொரோனாவால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு: இன்று முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணருடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையின் போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
எனவே சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 1997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாதிப்பு இரண்டாயிரத்ஹை நெருங்கி விட்டதை அடுத்து தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்