1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CAA Protesters rally to TN assembly building

சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி! – தடையை மீறி செல்லும் போராட்டக்காரர்கள்!

Tamilnadu
சென்னையில் சிஏஏ எதிர்ப்பு பேரணி
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டசபையை முற்றுகையிட்டு போராட இருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும் இன்று சட்டசபையை முற்றுகையிடப்போவதாக கூறி போராட்டக்காரர்கள் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

மதுரையில் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து சென்னையில் தலைமை செயலகம் முன்பு 550 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்!!