திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (22:16 IST)

உடல் உறுப்பு தானம் செய்த ரஜினி ரசிகர்கள் !

உடல்தானம் செய்த ரஜினி ரசிகர்கள் !

 

 

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், ரஜினி வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி துங்கப்போவதாகவும்,  அதற்கான வேலைகளில் ரஜினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும்  தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். MMM மருத்துவமனை மற்றும் மோகன் ஃபௌண்டேஷன் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரு அற்புதமான நிகழ்வை நடத்தினார்.
 
இதில், 450 க்கும் மேற்பட்டோர் உடல் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. ரஜினி மன்ற மாநில பொறுப்பாளர் வி.எம். சுதாகர் அவர்களின் நல்லாசியுடன் இந்த நிகழ்வு தொடங்கியது. சென்னை மத்திய வழக்கறிஞர் அணி செயலாளர் கே. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.  நடிகர் மயில்சாமி, சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.