தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
- 300 நாள்களை கடந்தாச்சு.. 27ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம்
- புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
- தமிழகம், புதுச்சேரி கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்! – மத்திய அமைச்சர் மகிழ்ச்சி ட்வீட்!
- புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதுச்சேரியில் பேருந்துகள் இயங்கவில்லை!
இன்று நடைப்பெற்று வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் புதுச்சேரியிலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் இன்று 10 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது காலை 6 மணிக்கு துவங்கியது. இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் புதுச்சேரியிலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் ஆந்திராவில் பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
