1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry local body election date announced

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Puducherry
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சூழலில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் அறிவிக்கபட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் அக்டோபர் 21, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் இதுவரையில்லாமல் முதன்முறையாக புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இம்ரான் கான்: தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - பாகிஸ்தான் பிரதமர்