தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
- தமிழகம், புதுச்சேரி கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்! – மத்திய அமைச்சர் மகிழ்ச்சி ட்வீட்!
- புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
- புதுச்சேரியில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!
- மேலும் கொரோனா அதிகரிக்கும்: சுகாதார செயலர் எச்சரிக்கை!
புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,25,826 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,25,826 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 969 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,23,023 பேர் குணமடைந்துள்ளனர்.
