தொடர்புடைய செய்திகள்
- தாலியை தட்டிவிட்டு மணமகளுக்கு கட்ட முயற்சி! – திருமணத்தில் நடந்த திடீர் குழப்பம்!
- உடை முதல் தேசிய கீதம் வரை பல மாற்றங்கள்… ராணி எலிசபெத் மரணம்!
- “அவர் என் மகள் அல்ல… வளர்ப்பு மகள்தான்…” திருமண சர்ச்சைகளுக்கு நடிகர் ராஜ்கிரண் பதில்
- கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்: அன்புமணி ராமதாஸ்
- ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டது உண்மைதான்: நடிகர் முனிஷ் ராஜா
திருமணம் நடைபெற சிலமணி நேரத்திற்கு முன் மாப்பிள்ளை மர்ம மரணம்: உறவினர்கள் போராட்டம்!
திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் புது மாப்பிள்ளை மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது
ஆனால் ஜெகதீஷ் ஓட்டிச்சென்ற வாகனத்திற்கு எந்தவித சேதமும் இல்லாததால் ஜெகதீஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்
மேலும் இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெகதீஷின் உறவினர்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
