1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:11 IST)

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்: அன்புமணி ராமதாஸ்

anbumani
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் கும்பகோணம் மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நெடுங் காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது போல் கும்பகோணம் மாவட்டத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால் நானே அந்த பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்றும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என கூறியிருந்தது என்பதையும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.