1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Boy dead when flex board fitting in tiruvarur

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

திருவாரூர்
திருவாரூரில் கோவில் திருவிழாவில் பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்து.
 
கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைத்த போது விபத்து ஏற்பட்டதாகவும், கோவில் திருவிழா குறித்த பிளக்ஸ் போர்டு வைக்கும்போது மின் கம்பியில் உரசியதில், 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர் என்றும், இந்த சம்பவத்தில் 15 வயதான மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை, மற்ற இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!