ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (16:41 IST)

சிறுவன் மீது விழுந்த விஜயின் பிறந்தநாள் பேனர்.! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..?

Banner
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 10 வயது சிறுவன் மீது நடிகர் விஜயின் பிறந்தநாள் டிஜிட்டல் பேனர் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சின்னசேலத்தில் உள்ள விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது தொண்டர்கள் வைத்திருந்தனர்.  ஜீன் 25 ஆம் தேதி மாலையில் மழை பெய்வதற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விஜய் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது.

அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மீது விழுந்தது. அதே இடத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. சிறுவன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. 

டிஜிட்டல் பேனர் விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அதை தூக்கி அதன் அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்டனர். சிறுவன் காயங்கள் இன்றி உயிர் தப்பினான்.


விஜயின் பிறந்தநாள் முடிந்த பிறகும் அந்த டிஜிட்டல் பேனர் அகற்றப்படவில்லை என்றும் டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.