வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (16:03 IST)

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதுவையில் நடந்த விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு சிறுவனை வைத்து சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் சிறுவனின் கைகள் பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்து ஓடுகளை உடைக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது சிறுவனின் கையில் நெருப்பு பற்றிக்கொண்டது. அதை அணைக்க முயன்ற போது அருகில் இருந்த பெட்ரோல் பாட்டில் விழுந்து தீ அதிகமாகி விபத்து பெரிதானது.

இதனை அடுத்து தீக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த சிறுவன் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த சிறுவன் “சாகசங்கள் செய்யும் போது இதல்லாம் சாதாரணம்தான். ஐ வில் கம்பேக். எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” என கூலாக பேசியுள்ளார்.