ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (16:54 IST)

நாட்டையே உலுக்கிய புனே கார் விபத்து: 17 வயது சிறுவனுக்கு ஜாமின்..!

Pune Car Accident
நாட்டையே உலுக்கிய புனே கார் விபத்து 17 வயது சிறுவனால் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டார் என்பதும் அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார் என்பதன் தெரிந்தது.
 
 இந்த நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புனேவில் நடந்த கார் விபத்தில் சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மட்டுமின்றி அவரது தந்தை தாய் தாத்தா என குடும்பமே சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 
கார் விபத்தின் சாட்சிகளை மாற்றியதற்காக சிறுவனின் தந்தை விஷால் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஜாமின் பெற நிலையில் தற்போது சிறுவனுக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சிறுவனின் தாயார் மற்றும் தாத்தா மட்டுமே இன்னும் சிறையில் உள்ள நிலையில் அவர்களுக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran