தவெகவுக்கு எதிராக குழந்தைகளை பேச வைத்தாரா உதயநிதி? வழக்குப்பதிவு செய்த போலீசார்..
தாராபுரம் சட்டமன்த் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நொச்சிபாளையம் பகுதியில் உதயநிதி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பிரச்சார வாகனத்தில் சிறுவன் ஒருவனை ஏற்றி முதல்வர் விஜய்யை விமர்சித்து பேச வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவது தேர்தல் நடத்தை விதிகளின்படி கடுமையான குற்றமாகும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெரம்பூர் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி அரசு மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் பாட்டு பாடுவதாக தவெக அரசை சாடினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

