1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP Vel Yatra date and place announced

வெற்றிவேல் யாத்திரை எப்போ? எங்கே? – பாஜக அறிவிப்பு!

Tamilnadu
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இடம், தேதி ஆகியவற்றை பாஜக வெளியிட்டுள்ளது.

முன்னதாக கந்த சஷ்டி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் கடவுள் முருகனை போற்றி தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதாக பாஜக அறிவித்திருந்தது. பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்டோர் கோரி வந்தனர்.

இந்நிலையில் வேல் யாத்திரை தேதியை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் 6ம் தேதி திருத்தணியிலிருந்து வேல் யாத்திரை பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்