திருமாவளவன் சப்போர்ட்டர்ஸ் கலவரம் பண்ணுவாங்க! – இல.கணேசன் குற்றச்சாட்டு!
பாஜக நடத்த உள்ள வேல் யாத்திரையில் திருமாவளவன் ஆதரவாளர்கள் கலவரம் செய்துவிடாமல் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இல.கணேசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேல் யாத்திரையால் பிரச்சினைகள் எழலாம் என்பதால் இதை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி வருகிறார்.
இந்நிலையில் திருமாவளவின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் “பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த முன்பே திட்டமிட்டு வருகிறோம். இதில் திருமாவளவன் சார்ந்த சிலர் கலவரம் செய்ய திட்டமிடுகின்றனர். எனவே வேல் யாத்திரைக்கு அரசு போதுமான பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த யாத்திரை கட்சி ரீதியானதுதானே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என கூறியுள்ளார்.