1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (08:47 IST)

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்; முதல்வர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் காலமான நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் அமைச்சர் துரைக்கண்ணு காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தி அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.