வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (17:13 IST)

தமிழக கோயில்களில் அன்னதானம் தொடர அனுமதி கேட்டு பாஜக கோரிக்கை !

கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில்  ஏழை, எளிய   மக்களுக்கு அன்னதானம் , முதலிய உதவிகளை வழங்ல அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இந்நிலையில், கோயில்களில்  அன்னதானம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக  தலைவர்  எல்.முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.