தொடர்புடைய செய்திகள்
- முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- ஆளுனர் இதுவரை 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: மக்களவையில் கனிமொழி பேச்சு
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு; என்ன பேசினார்கள்?
- ”கொஞ்சம் பண கஷ்டம்.. ஆன்லைனில் காசு கேட்ட கவர்னர்?” – இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி!
- கவர்னர் ஆகிறார் முன்னாள் முதலமைச்சர்.. விரைவில் அறிவிப்பு!
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுனர் பதவி! – குடியரசு தலைவர் அறிவிப்பு!
தமிழ்நாடு பாஜக கட்சியின் முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுனராக நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆளுனர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் தற்போது சில மாநிலங்களுக்கான ஆளுனர்களை மாற்றியமைத்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுனராக இருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நாகலாந்து ஆளுனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
