திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (09:41 IST)

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் கொள்ளை! – திருவண்ணாமலையில் மர்ம கும்பல் கைவரிசை!

ATM Theft
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் தொடர்ந்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்கள் பல பகுதிகளிலும் உள்ள நிலையில் இந்த ஏடிஎம்களில் சிலர் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அவ்வபோது நடந்து வருகின்றன. ஆனால் திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை போளூரில் உள்ள ஏடிஎம்மில் ரூ.19.50 லட்சமும், பணிமனை ஏடிஎம்மில் ரூ.31 லட்சமும், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சமும், கலசப்பாக்கம் பகுதி ஏடிஎம்மில் ரூ.2.50 லட்சமும் என மொத்தமாக ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது ஒரே கும்பலின் கைவரிசையா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Edit by Prasanth.K