1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (22:34 IST)

முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

shibu choran
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எம்பியுமான சிபு சோரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மா நிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சிபு சோரன். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, 2008-2009 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவி வகித்தார்.

தற்போது அவரது மகனும் ஜார்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

இந்த   நிலையில், முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன்(79) இன்று திடீர் உடல் நலக்குறைவால் ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சி விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதால், அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் தொடன்ர்து அவரை கண்காணிப்பதாகவும் கூறி, அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.