1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:33 IST)

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு; என்ன பேசினார்கள்?

nirmala tamilisai
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு; என்ன பேசினார்கள்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புதுவை மாநில துணை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். 
 
புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று டெல்லி பயணம் செய்த நிலையில் அவர் அங்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். 
 
இந்த சந்திப்பின்போது 2023-4 நிதியா ஆண்டிற்கான பட்ஜெட்டை தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். 
 
மேலும் தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களின் முன்னேற்ற திட்டங்கள் குறித்தும் மத்திய நிதி அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva