தொடர்புடைய செய்திகள்
- மக்கள் அனைவரும் மறக்காமல் ஓட்டு போட வேண்டும்! – முதல்வர் வேண்டுகோள்!
- சென்னையில் பூத் ஸ்லிப்புடன் பணம் விநியோகம்! – அதிமுக மீது திமுக குற்றச்சாட்டு!
- கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!
- வாக்காளர்களுக்கு கொலுசு விநியோகம்? திமுக முற்றுகை! – தருமபுரியில் பரபரப்பு!
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடக்கம்
ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர்! – வெளியேற்றிய தேர்தல் அதிகாரிகள்!
மேலூர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சாவடியில் பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலூர் நகராட்சி 8வது வார்டு வாக்கு சாவடியில் வாக்களிக்க இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். அவரை ஹிஜாபை அகற்றும்படி வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில் பிற கட்சி முகவர்கள் பாஜக முகவரின் செயலை கண்டித்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள் பாஜக முகவரை வெளியேற்றியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
