1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin request to people for voting

மக்கள் அனைவரும் மறக்காமல் ஓட்டு போட வேண்டும்! – முதல்வர் வேண்டுகோள்!

Tamilnadu
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் மறக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் தனது வாக்குகளை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தின் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பொதுமக்கள் அனைவரும் மறக்காமல் தனது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். கோவையில் துணை ராணுவத்தை அழைக்கும் அளவு எந்த பிரச்சினையும் இல்லை” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர்! – வெளியேற்றிய தேர்தல் அதிகாரிகள்!