தொடர்புடைய செய்திகள்
- லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! – ’ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்
- கத்தியை எடுத்து வயிற்றில் குத்திப் பார்த்த இளைஞர் ! விளையாட்டு விபரீதம்...
- நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- மளிகை கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை...
- 22 வயது இளைஞரை காதலித்த 15 வயது சிறுமி.. வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை..!
மின்வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து 22 வயது இளைஞர் பலி.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
மின்வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து பைக்கில் சென்ற 22 வயது இளைஞர் பரிதாபமாக பலியான சம்பவம் சென்னை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் மின்வாரிய கேபிள் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் அந்த பள்ளம் குறித்து முறையான எச்சரிக்கை பலகைகள் மின்விளக்குகள் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் குணா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பள்ளத்தை கவனிக்காமல் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த குணா என்ற 22 வயது இளைஞர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளம் குறித்து முறையான எச்சரிக்கை பலகை வைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva
