திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (10:41 IST)

22 வயது இளைஞரை காதலித்த 15 வயது சிறுமி.. வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை..!

தேனி மாவட்டத்தில் 22 இளைஞரை 15 வயது சிறுமி காதலித்த நிலையில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் சிறுமி இடையே காதல் உண்டாகியது. 22 வயதான மாரிமுத்து பதினைந்து வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
மேலும் சிறுமி வீட்டார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிமுத்து மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றார். 
இந்த நிலையில் சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வந்த நிலையில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by siva