1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. coakroach janat party condemn delhi police

இதை செய்யலனா மீண்டும் போராட்டம்!.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை...

abhjeet dipke
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் பலரும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் வலுப்பெறவே மத்திய அரசுக்கு அதை சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது..

அதோடு நீட் தேர்வு முறைகேட்டால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வைத்த இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஆனால் ஒரு பக்கம் போராட்டக்காரர்களை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் டெல்லி காவல்துறை இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சிலரை கைது செய்திருக்கிறது. மேலும் சமூகவலை நிறுவனங்களுக்கு டெல்லி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நூற்றுக்கணக்கான பதிவுகளை நீக்க கோரியுள்ள போலீசார் ஏஐ உருவாக்கப்பட்ட அவதூறு பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கரப்பான் ஜனதா கட்சி ‘போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்வதற்கு கரப்பான் ஜனதா கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.. வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.. கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்’ என கூறியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தியாகி தர்மேந்திர பிரதான்.. பாராளுமன்றத்திற்கு வருகை தந்தவருக்கு என்.டி.ஏ எம்பிக்கள் பாராட்டு...