1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (19:16 IST)

கத்தியை எடுத்து வயிற்றில் குத்திப் பார்த்த இளைஞர் ! விளையாட்டு விபரீதம்...

youngster
எந்தப் பொருளாக இருந்தாலும் செக் பண்ணி வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் எந்த எந்த பொருளை சோதனை செய்ய வேண்டுமோ அதை மட்டும்தான் சோதனை செய்ய வேண்டும்.

ஆபத்துள்ள பொருட்களை சோதனை செய்தால் அதுவே ஆபத்தாக மாறிவிடுவதும், சில நேரங்களில் விளையாட்டிற்குச் செய்யப்படும் செயலே கூட வினையாகிவிடுவது உண்டு.

இந்த நிலையில், இளைஞர் ஒருவர் கடைக்குச் சென்று, அங்குள்ள பொருட்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, அவர் அங்குள்ள கத்தியை எடுத்து, அது கூர்மையாக உள்ளதா என்று சோதித்து அறிய எண்ணி, தன் வயிற்றில் கத்தியை வைத்து லேசாக அழுத்தினார்.

அந்தக் கத்தி, உண்மையிலேயே அவர் வயிற்றைப் பதம் பார்த்துவிட்டது. அவர் தன் வயிற்றில் என்னமோ திரவம் வடிகிறது என்பதைத் தொட்டுபார்த்தபோது ரத்தம்…அதிர்ச்சியடைந்துவிட்டார் அந்த இளைஞர். இந்த விபரீதமான வீடியோ பரவலாகி வருகிறது.