1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bihar cm nitiesh kumar tamil nadu visit cancel

ஜனாதிபதியை அடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் ரத்து..!

ஜனாதிபதி
கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை திறக்க இருந்த நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று திருவாரூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறக்க இருந்த நிலையில் அவரது தமிழக பயணமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
பீகார் முதலமைச்சர் நிதிஷ்மாரின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீகார் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் தமிழக பயணம் ரத்து என தகவல் வெளியாகி உள்ளன.
 
திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று பீகார் முதலமைச்சர் திறக்க இருந்த நிலையில் அவரது தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அமலாக்கத் துறையின் மேல்முறையீடு.. செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு..!