செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (12:32 IST)

ஜனாதிபதி தேதி கிடைக்கவில்லை, பல்நோக்கு மருத்துவமனையை திறக்கிறார் முதல்வர்..!

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்றா தகவல் வெளியாகியுள்ளது.
 
ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில் இந்த மருத்துவமனையை கடந்த 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது
 
ஆனால் திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியின் தேதி கிடைக்கவில்லை என்பதால் சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva