திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (19:15 IST)

கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

stalin mk
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  பிறந்த நாள்  கடந்த ஜூன் 3 ஆம் தேதி ஆகும். இந்த ஆண்டு கருணாநிதியின்  100 வது பிறந்த நாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில்  ரயில்கள்  கோர விபத்து ஏற்பட்டதையொட்டி கருணாநிதி  பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மரத்தை நாம் வளர்த்தால்
மரம் நம்மை வளர்க்கும்!"

தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னது. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்!

தலைவர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் திறந்து வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.