கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கவில்லையா?
கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்காததால் முதலமைச்சரே திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில் இதற்கு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் காரணமாக மருத்துவமனை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைப்பார் என தமிழக அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Mahendran