1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ramarajan sharing his memory with bharathiraja

பாரதிராஜா எனக்கு பண்ணத மறக்கவே மாட்டேன்!.. ராமராஜன் பேட்டி!..

ramarajan
இயக்குனர் பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாகவே வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் அவர் காலமானார். இதையடுத்து திரையுலகினர் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் ராமராஜன் நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசி அவர் ‘நான் இயக்குனர் ராம நாராயணனிடம் பல படங்களிலும் உதவி இயக்குனராக வேலையை பார்த்திருக்கிறேன். ஆனாலும் எனது மானசீக குருவாக நான் பார்த்தது பாரதிராஜாவைத்தான். அவரைத்தான் இயக்குனர் என எப்போதும் அழைக்கிறேன்.. அவர் இப்போது இல்லாமல் போனது எனக்கு மிகப்பெரிய கஷ்டம்.. அவர் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்..
 
நான் முதல் முதலாக இயக்கிய திரைப்படம் மண்ணுக்கேத்த பொண்ணு. இந்த படத்தை பார்க்க பாரதிராஜா வருகிறார் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் திடீரென போன் செய்து அவருக்கு வேறு வேலை இருப்பதால் வரவில்லை என்று சொன்னார்கள். என் முதல் படத்தை பார்க்க அவர் வரவில்லையே என்று ஏமாற்றமடைந்தேன்.
 
படம் முதல் பாதி ஓடி முடிந்த நிலையில் பாரதிராஜா வந்துவிட்டார். இரண்டாம் பாதி மட்டுமே பார்த்தார். பார்த்துவிட்டு வெளியே வந்தவர் ‘யார் இயக்குனர்?’ எனக்கேட்டார். நான்தான் என்று சொன்னதும் ‘நீ யாரிடம் வேலை பார்த்தே’ என்று கேட்டார். ராமநாராயணன் என்று சொன்னதும் ‘அவரிடமா?’ என ஆச்சர்யமாக பார்த்தார். 

உடனே நாளை காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வா என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அடுத்தநால் அங்கே போய் அவரை நேரில் பார்த்தபோது என் கையில் ஐயாயிரம் பணத்தை கொடுத்து ‘என்னுடைய நிறுவனத்திற்கு அடுத்த படத்தை இயக்கு’ என்று சொன்னார். அதை நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அந்த தெய்வம் இன்று நம்முடன் இல்லை’ என ராமராஜன் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
75 கோடி வசூலை அள்ளிய பிளாஸ்ட்!... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?..