1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gangai amaran angry to barathiraja wife

அவரைத் தனியாக விட்டுட்டு போயிட்டீங்க..அனாதையா செத்துக் கிடந்தாரு: பாரதிராஜா மனைவியிடம் கோபப்பட்ட கங்கை அமரன்

barathi raja
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த பெருமைக்குரிய இயக்குனர் இமயம்  பாரதிராஜா  இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
1977-ம் ஆண்டு வெளியான  16 வயதினிலே  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்தவர் பாரதிராஜா. அதுவரை ஸ்டூடியோக்களுக்குள்ளும், செயற்கையான நாடகத் தன்மையோடும் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை, முதன்முதலில் கிராமத்து மண்ணிற்கும், நிஜ மனிதர்களின் வாழ்வியலுக்கும் கூட்டிச் சென்ற பெருமை இவரையே சேரும். பாரதிராஜா திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய புதுமுக நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இன்று தமிழ் சினிமாவின் தூண்களாக விளங்கி வருகின்றனர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இந்த இழப்பு பாரதிராஜாவை மனதளவில் கடுமையாக பாதித்தது. இதற்கிடையே, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த பல வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் பாரதிராஜா முற்றிலும் தனிமையில் வாடி வந்தார்.
 
வயது மூப்பு மற்றும் மறதி நோய்  காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவரை, இளையராஜாவின் சகோதரரும், பிரபல இயக்குனருமான கங்கை அமரன் அடிக்கடி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளார். மேலும், பாரதிராஜாவின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.
 
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது, நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த பாரதிராஜாவின் மனைவி, அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார். இதைக் கண்ட கங்கை அமரன், கட்டுக்கடங்காத கோபத்துடனும் ஆதங்கத்துடனும்,  எல்லாரும் அவரைத் தனியாக விட்டுட்டு போயிட்டீங்க.. கடைசியில அனாதையா செத்துக் கிடந்தாரு!  என்று சத்தமாகக் கத்தினார். கங்கை அமரனின் இந்த திடீர் கோபத்தால் அங்கு கூடியிருந்தவர்களிடையே சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலை இயக்கத்தில் ரஜினியின் மருமகன்!.. எல்லாம் பிளானா?..