திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (09:15 IST)

ஓட்டு எண்ணுவதற்கு முன்பே எம்பி கல்வெட்டு: ஓபிஎஸ் மகனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே ஓபிஎஸ் மகனின் பெயருடன் எம்பி என ஒரு கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டதற்கு பயங்கர எதிர்ப்பு வலுத்து வருகிறது.
 
மக்களவை தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகள் அனைத்து வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செலவனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று தேனி தொகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த விசேஷத்தில் ஒரு கல்வெட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்ற பெயர்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேதி பாராளுமன்ற தொகுதி எம்பி ரவீந்திரநாத்குமார், என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இன்னும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் ரவீந்திரகுமார் வெற்றியா? தோல்வியா? என்று தெரியாத நிலையில் அவர் தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.