நடுரோட்டில் சண்டை : டிராஃபிக் போலீஸைக் கடித்த வாகன ஓட்டுநர்

traficpolice
Last Updated: புதன், 15 மே 2019 (20:42 IST)
ராமநாதபுரத்தில் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் சக காவலர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இரு குட்டியானை வாகனத்தில் வந்தவர்கள் அதிகளவில் மரக்கட்டைகளை ஏற்றிவந்துள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாகனத்தை போலீஸார் நிறுத்துமாறு கூறியும் வாகன ஓட்டுநர்  நிறுத்தாமல் சென்றுள்ளார்.இதனால் கோபமுற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் வாகன ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்து சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.
 
இதனால் இருவருக்கும் இடைடே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது வாகன் ஓட்டுநரும் பதிலுக்கு காவல் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து தள்ளினார். இதில் ஆய்வாளர் கீழே விழுந்தார். அப்போது வாகன ஓட்டுநர் காவல் ஆய்வாளரைக் கடித்துவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :