முஸ்லீம் கட்சியாக மாறுகிறதா கமல் கட்சி?

Last Modified வியாழன், 16 மே 2019 (21:12 IST)
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் கமல் பேசிய பேச்சுக்கு இந்துக்களிடம் இருந்து எந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகின்றதோ, அதே அளவுக்கு இஸ்லாமியர்களிடம் இருந்து ஆதரவும் கிடைத்து வருகிறது.
இந்த ஆதரவு இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கண்கூட தெரிந்தது. அரவக்குறிச்சியில் இன்று மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசனை பேச்சை கேட்க ஏராளமான இஸ்லாமியர்கள் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் குவிந்தனர். இதனால் கமல் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல் பேசியபோது, 'இந்தியாவே திரண்டு சுதந்திரம் வாங்கியது, ஆனால் அந்த நாடு
இப்படி ஆனது ஏன்? என அனைவரும் யோசிக்க வேண்டும். திசை மாறிப்போன நாட்டை திருத்துவதற்கான கருவி நாம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும், அப்படி செய்தால் நாளை நமதே. மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றும் பேசினார்.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சிற்கு பின்னர் இஸ்லாமியர்களிடையே அவருக்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும், வரும் 19ஆம் தேதி நடைபெறும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியே போனால் கமல் கட்சி முஸ்லீம் கட்சியாக மாறிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :