பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராமவாசிகளால் பரபரப்பு

marathi
Last Updated: வியாழன், 16 மே 2019 (17:17 IST)
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் அது கள்ளக்காதலாக மாற ஆசை நாயகனுடன் ஓட்டம் பிடித்தார் அந்த பெண். இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் கள்ளகாதலனுடன் போனில் சமரசமாக போகலாம் என நைசாக பேசி அவர்களை ஊருக்கு வர சொல்லியுள்ளார்.
இதை நம்பி அந்த இளைஞர் தனது உறவுக்கார பெண்கள் இருவரோடு, தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். அங்கே சென்றதும் அந்த பெண்ணின் கணவரும், அவரது உறவினர்களும் கள்ளக் காதலனையும், அவனுடன் வந்த பெண்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்ய தொடங்கினார்கள். அந்த பெண்கள் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல்களையும் செய்துள்ளனர்.
 
இந்த சித்ரவதை காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர் என்பதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :